spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஜூன் 04- ஆம் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. டிடிவி தினகரன் வசமாகும்"- அண்ணாமலை பேச்சு!

“ஜூன் 04- ஆம் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. டிடிவி தினகரன் வசமாகும்”- அண்ணாமலை பேச்சு!

-

- Advertisement -

 

"ஜூன் 04- ஆம் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. டிடிவி தினகரன் வசமாகும்"- அண்ணாமலை பேச்சு!

we-r-hiring

வரும் ஜூன் 04- ஆம் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. டிடிவி தினகரன் வசமாகும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வெற்றிப் பாதைக்கு திரும்புமா பஞ்சாப் – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்

தேனி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “வரும் ஜூன் 04- ஆம் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. டிடிவி தினகரன் வசமாகும். டிடிவி தினகரன் கையில், அ.தி.மு.க. முதலிலேயே சென்றிருந்தால் ஸ்டாலின் முதல்வராகியிருக்க மாட்டார். அ.தி.மு.க.வை ஒப்பந்ததாரர்களுக்கு தாரைவார்த்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் டிடிவி தினகரன் பக்கம் உள்ளனர்” என்று கூறி, அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்!

அண்ணாமலையின் கருத்து குறித்து கூறிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அரசியலில் அண்ணாமலை ஒரு அறியாப்பிள்ளை; தமிழகத்தில் மதவாதம், ஜாதி அரசியலுக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு தந்ததில்லை” என விமர்சித்துள்ளார்.

MUST READ