Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்காக அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்

மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்காக அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்

-

- Advertisement -

சென்னையில் மெட்ரோ 2 ம் கட்ட பணிகளுக்காக பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை என அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடங்குகிறது.

metro-work

we-r-hiring

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,246 ஆயிரத்து கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ இரயில் பாதை மற்றும் இரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சென்னையில் முதல் கட்டத்தை தொடர்ந்து தற்போது போக்குவரத்து நெரிசலை மேலும் குறைப்பதற்காக வழித்தடம் 3- மாதவரம் முதல் சிப்காட் வரை 45.8கி.மீ நீளத்திற்கும்,வழிதடம் 4 – கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ நீளத்திற்கும்ல் வழித்தடம் 5 – மாதவரம் முதல் சொலிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்திற்கும் என 80 உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்கள்,48 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் என மொத்தம் 128 இரயில் நிலையங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ இரயில் பாதை அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பசுமை வழிச்சாலையில் மெட்ரோ இரயில் நிலையம் அமைய உள்ள பகுதியில் சுரங்க இரயில் நிலையத்துக்கான சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் அடையாறு ஆற்றில் 6 மீட்டர் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் மிதவை படகில் எந்திரங்கள் பொருத்தி 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண்பரிசோதனை செய்யும் பணியும் ஏற்கனவே முடிந்துள்ளது.

metro train
metro train

இந்தநிலையில் பசுமை வழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்க 2 சுரங்கம் தோண்டும் எந்திரம் (tunnel Boring machine) கொண்டு வரப்பட்டு, சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்து இயங்குவதற்கு தயார் நிலையில் உள்ள நிலையில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்குகிறது.

இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு காவேரி என பெயரிடப்பட்டுள்ளது. 1 கிலோமீட்டர் நீளம் உள்ள அடையாறு ஆற்றின் அடியில் ஒரு நாளைக்கு 10 மீட்டர் சுரங்கம் தோண்டப்படும் நிலையில், 100 நாட்களுக்குள் ஆற்றின் அடிப்பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ