விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி- வேளாண் பட்ஜெட்டின் அதிரடி அம்சங்கள்
உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
- மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க மிளகாய் மண்டலம்.
- மல்லிகை பயிர் வேளாண்மை முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத்தர ரூ.7 கோடி ஒதுக்கீடு
- சர்க்கரை ஆலை கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு
- தக்காளி உற்பத்தியை அதிகரிக்க ரூ.19 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
- கருவேப்பில்லை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு
- தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரூ.11 கோடியில் முருங்கை இயக்கம் செயல்படுத்தப்படும்.
- நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ரூ.12 கோடியில் பருத்தி இயக்கம்
- பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து, பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து, கடலூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு.
- பலாவில் புதிய ரகங்கள், உயர் மகசூல், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக கடலூர் மாவட்டம் பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலா ஆராய்ச்சி.
- மாடு, ஆடு, தேனி வளர்ப்பு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள ரூ.50 கோடி நிதியுதவி மற்றும் வட்டியில்லா கடன் வழங்கப்படும்
- 3-4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்; ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி நியமனம்.
- நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள் உற்பத்திக்கு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு- வேளாண் பட்ஜெட்.
- ரூ. 33 கோடியில் எண்ணெய் வித்துக்களுக்கான சிறப்பு மண்டலம் திட்டம்.
- உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்-2.0 செயல்படுத்தப்படும்.
- சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ₹3 கோடி நிதி ஒதுக்கீடு.
- தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க நடவடிக்கை. இதற்காக ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 10 லட்சம் குடும்பங்களுக்கு பழ மரக்கன்று வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வெளிநாட்டு தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளும் வகையில் விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி ஒதுக்கீடு