spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு அதிகாரம்!

கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு அதிகாரம்!

-

- Advertisement -

 

கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு அதிகாரம்!

we-r-hiring

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்துக்கு தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி?- தே.மு.தி.க. ஆலோசனை!

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் கூட்டணி, தொகுதிகள் குறித்து முடிவுச் செய்வதற்கான தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.

இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகம், நேரடியாக தே.மு.தி.க. பேசவில்லை; கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு வழங்கி கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

“அரசியல் வருகை இல்லை….ஆனால் எதிர்காலத்தில்?”- நடிகர் விஷால் ட்விஸ்ட்!

ஏழு மக்களவைத் தொகுதியுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க தே.மு.தி.க. தலைமை முடிவுச் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ