விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் செப்.18-ல் ஆஜராக வேண்டும்
நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித்தனர்.
தன்னை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார். அதில், சீமான் தனக்கு கட்டாயப்படுத்தி பல முறை கருக்கலைப்புச் செய்ததாகவும், அவரை கைது செய்யக்கோரியும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சீமான் மீது ஐந்து பிரிவுகளில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவுச் செய்த நிலையில், நடிகை விஜயலட்சுமி தனது புகாரை திடீரென வாபஸ் செய்துள்ளார்.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித்தனர். விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையிலும், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், இதுதொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். அதே சமயம் நடிகை விஜயலட்சுமி புகாரை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் சீமான் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. இதனிடையே புகாரை வாபஸ் பெற்றதால் சீமான் ஆஜராக மாட்டார் என சீமான் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.