spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இம்மானுவேல் சேகரின் 66 வது நினைவு நாள் :

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இம்மானுவேல் சேகரின் 66 வது நினைவு நாள் :

-

- Advertisement -

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  இம்மானுவேல் சேகரின் 66 வது நினைவு நாளையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் அமைந்துள்ள அண்ணாரது நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இம்மானுவேல் சேகரின் 66 வது நினைவு நாள் :

“ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவரும் ,தீண்டாமையை ஒழிக்க முனைப்போடு பாடுபட்டவருமான, இம்மானுவேல் சேகரனாரின் 66வது நினைவுநாள் வரும் 11.9.2023 திங்கட்கிழமை அன்று கடைபிடிக்க படுகிறது .இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அன்று காலை 10 மணியளவில் மலரஞ்சலி செலுத்துகிறார்கள்.

we-r-hiring

இந்நிகழ்விற்கு தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி ஒன்றிய,நகர, பேரூர் ,கழகம் மற்றும் அணைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், வார்டு/ வட்ட கழக செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள், கழக தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக  பங்கேற்குமாறு கேட்டுகொள்கிறோம்”  என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தெரிவித்துள்ளனர்.

MUST READ