Homeசெய்திகள்தமிழ்நாடுகாவிரி விவகாரம்- திமுக அரசை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

காவிரி விவகாரம்- திமுக அரசை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

-

காவிரி விவகாரம்- திமுக அரசை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும்  கர்நாடக காங்கிரஸ் அரசையும், காவிரி விவகாரத்தில்  இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத தி.மு.க. அரசையும் கண்டித்து செப்.5-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக அமமுக தலைமை அறிவித்துள்ளது. 

ttv dhinakaran

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீரை நம்பி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை செய்து வருகின்றனர். தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம்  சரிந்து வரும் நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு சொல்லிவருவதால் குறுவைப் பயிர்கள் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைப் பற்றி அக்கறை இல்லாமல் தேர்தல் கூட்டணி மட்டுமே முக்கியம் என்று சுயநல போக்குடன் விடியா திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும்; டெல்டா விவசாயிகளின் ஜீவாதார பிரச்சனையாக உள்ள காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத தி.மு.க. அரசையும் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பெரியார் சிலை அருகில் வருகிற 05.09.2023 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்வதாக அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவிதினகரன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்கள். கர்நாடக காங்கிரஸ் அரசையும் மக்கள் விரோத தி.மு.க. அரசையும் கண்டித்து நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு / வட்டக் கழகம் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ