ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை போலீசார் சற்று முன் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை பாஜக மகளிர் அணி துணை செயலாளர் அஞ்சலையை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகியான அஞ்சலை, கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்ததோடு, உளவு பார்க்கும் வேலையிலும் அஞ்சலை ஈடுபட்டுள்ளார். இந்த தொடர்பின் அடிப்படையில் அஞ்சலையை கைது செய்ய தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா மகளிரணி செயலாளர் அஞ்சலை (47) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலையை கட்சியில் இருந்து நீக்கம் செய்து பாஜக தலைமை அறிவித்தது.
இந்நிலையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட புளியந்தோப்பைச் சேர்ந்த அஞ்சலையை ஓட்டேரியில் பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.