spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிணத்தை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை

-

- Advertisement -

புழல் அருகே பால் நிறுவன மேலாளர் பணம் கையாடல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டதை பாஜகவின் முன்னால் தலைவர் அண்ணாமலை அவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.பிணத்தை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலைமேலும் இது குறித்து அவர் தனது அறிக்கையில், ”திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் திரு. பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 27 ஆம் தேதி, திரு. நவீன் மீது புகாரளித்த நிலையில், சுமார் இரண்டு வாரங்களாகியும், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யாமல், துணை ஆணையரே நேரடியாக விசாரித்து வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. துணை ஆணையர் திரு. பாண்டியராஜன் தற்போது விடுமுறையில் சென்றிருப்பதும் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

we-r-hiring

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், உண்மையில் காவல்துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை.

தமிழக அரசின் உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாமல் செயலிழந்து விட்டாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் பொறுப்பற்ற செயல்பாடுகளால் இன்னும் எத்தனை சட்ட மீறல்களைப் பொதுமக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்? உங்கள் நிர்வாகத் தோல்விகளுக்கு, வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா?

உடனடியாக, நவீன் அவர்கள் மரணம் குறித்த நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், இரண்டு வாரங்களாக வழக்குப் பதிவு செய்யாமல், நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிய கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

புழல் அருகே பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்துகொண்டார். திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை தொடர்ந்து திருமலா பால் நிறுவனத்தின் மேலாளரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது” என பதிவிட்டுள்ளாா்.

புழல் அருகே பால் நிறுவன மேலாளர் பணம் கையாடல் குற்றச்சாட்டில் தற்கொலை செய்துகொண்டதை, காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.  பிணத்தை வைத்து அரசியல் செய்யும் அவருடைய அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெருவிக்கின்றனர்.

திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் நவீன் என்பவர் பணியாற்றி வந்தநிலையில் சுமார் 45 கோடி வரை நவீன் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக திருமலா பால் நிறுவனம் கொளத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. இந்நிலையில் பால் நிறுவன மேலாளர் நவீன் தற்கொலை செய்து கொண்டதாகவும் இதற்கு பால் நிறுவனம் முழு பொறுப்பு என்றும் கடிதம் எழுதி வைத்துள்ளாா். பிணத்தை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை

தற்கொலை தொடர்பாக மேலாளர் நவீன் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அந்த கடிதத்தில், ”இன்று (9ஆம் தேதி) தன்னை சந்தித்த நரேஷ் மற்றும் முகுந்த் ஆகிய இருவரும் மோசடி செய்த பணத்தை தான் திருப்பி கொடுத்தாலும் ஜெயிலில் இருப்பாய் என மிரட்டியதாகவும், இதனால் அச்சமடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். புகார் அளிக்க முடிவு செய்ததால் தன்னுடைய எதிர்காலத்தை எண்ணி பயந்து தற்கொலை முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். தன்னுடைய தற்கொலைக்கு திருமலா பால் கம்பெனி நிர்வாகமே காரணம் என கூறியுள்ளார்.

தான் பெரிய மோசடி செய்து விட்டதாகவும் இது வெளியே தெரிந்த பிறகு நான் அதை சரி செய்து விடுவதாக கூறி முதல் கட்டமாக கடந்த மாதம் 26 ஆம் தேதி 5 கோடி ரூபாய் திருப்பி செலுத்தி விட்டதாகவும், மூன்று மாதத்தில் மீதத் தொகையை செலுத்தி விடுவதாக உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த மோசடியில் தனக்கு மட்டுமே தொடர்பு எனவும் வேறு யாருக்கும் இதில் தொடர்பில்லை என்றும் கூறிவிட்டதாகவும், பணம் கைமாறப்பட்ட நான்கு கணக்குகளில் இருந்து மொத்த பணமும் தன்னிடம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், இந்த மோசடியில் யாரும் பயனடையவில்லை எனவும் தனக்கு மட்டுமே தொடர்பு என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக பால் நிறுவன அதிகாரிகள் புகார் ஏதும் அளிக்க வேண்டாம் என்றும் கூறிய நிலையில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பால் நிறுவனம் தன்னுடைய சொத்து ஆவணங்களையும் பாஸ்போர்ட்டையும் காசோலைகளையும் வாங்கி வைத்துள்ளதாகவும், பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துள்ளதற்கான அத்தாட்சி கூட கொடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் எனக் கூறியபோதும் பால் நிறுவனம் ஏற்றுக்கொள்ளாமல் தன்னை சித்திரவதை செய்ததாகவும் என்னுடைய சடலத்திலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனவும், இப்போது உங்களால் எதையும் மீட்க முடியாது என்றும் பால் நிறுவன அதிகாரிகள் பெயரை குறிப்பிட்டு எனது சடலத்தை அலுவலக வாசலில் வைத்து பணத்தை வசூலித்துக் கொள்ளுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பால் நிறுவனத்தில் பல மோசடிகள் நடைபெற்று வருவதாகவும், என்னுடைய மரணம் உங்களது சாம்ராஜ்யத்தை விரைவில் அசைத்துப் பார்க்கும் என நவீன் தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பால் நிறுவன அதிகாரிகள் தமது குடும்பத்தினர் என ஒவ்வொரு பெயராக குறிப்பிட்டு குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு வருத்தத்தையும் நவீன பதிவு செய்துள்ளார்”.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்-தேர்தல் ஆணையம் பிடிவாதம்..நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

MUST READ