சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஜூலை 26) பிற்பகல் 03.00 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, இரும்பு பெட்டியில் வைத்து ஆளுநரிடம் தி.மு.க. ஊழல் ஆவணங்களை அண்ணாமலை வழங்கினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் 3ஆம் முறையாக நீட்டிப்பு!
அத்துடன், “தி.மு.க. ஊழல் ஆவணங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி ஆளுநரிடம் பா.ஜ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
“அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது”- உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்!
ஆளுநருடனான சந்திப்புக் குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இன்று பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன், நமது தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்தோம். ஆளுநரிம், தி.மு.க. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, ‘தி.மு.க. ஃபைல்ஸ் பகுதி 2’ ஆவணங்களையும், மேலும், ரூபாய் 5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.