ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுவை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பற்றி ஒரு வார்த்தை கூட அண்ணாமலை பேசவில்லை.

தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை, “தர்மபுரியில் சிப்காட் அமைப்பேன் என தி.மு.க சொல்லி 14 வருடம் ஆகிவிட்டது இன்னும் ஒரு செங்கலை கூட இன்னும் வைக்கவில்லை. இந்த ஒற்றை செங்கல்லை உதயநிதிக்கு அனுப்புறேன். தமிழகத்தில், 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரு லட்சம் செங்கல்களை கொடுத்திருக்கிறது மோடி அரசு. மதுரை எய்ம்ஸ் செங்கலை திருடிக் கொண்டுவந்தது இருக்கட்டும், குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாயை எப்போது கொடுப்பீர்கள்? மோடி அரசு தமிழகத்திற்கு 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை கொடுத்துள்ளது. அதில் 1650 மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஒவ்வொரு கல்லூரி கட்டுவதற்கும் லட்சக்கணக்கான செங்கல் பயன்படுத்தபட்டுள்ளது. இது தெரியாத செங்கல் திருடன் ஒற்றைச் செங்கல்லை தூக்கி கொண்டு திரிகிறான். அந்த செங்கல் திருடனுக்கு எனக்கும் வித்தியாசம் இருக்கிறது
பிரியாணி கடையில் மன்னிப்பு கேட்ட ஸ்டாலினுக்கு, ராணுவ வீரர் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்க தயக்கம் ஏன்? பாக்கெட் சாராயம் கொண்டு வந்த அந்த பேனாவிற்கு எதற்காக சிலை? பேனாவை எங்கு வைக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு கூட தெரியும். ஆனால் திமுகவிற்கு இது தெரியாது” என பேசினார்.
