spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

-

- Advertisement -

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

we-r-hiring

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு கால்நடைத்துறை முதன்மைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக்கை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையை அர்ச்சனா பட்நாயக் பெற்றுள்ளார். தற்போது தமிழ்நாடு அரசின் சிறு, குறு தொழில்துறை (MSME) செயலாளராக உள்ள அர்ச்சனா பட்நாயக் 2002 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியராக அர்ச்சனா பணியாற்றி உள்ளார். கோவையின் முதல் பெண் கலெக்டர் என்ற பெருமை இவருக்கு உள்ளது. மேலும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தொழில்துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

 

MUST READ