அரியலூரியில் பட்டியலின நபரை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. நிர்வாகி உள்பட ஐந்து பேர் தலைமறைவாகிவிட்டனர்.
“மின் இணைப்பு பெயரை மாற்ற சிறப்பு முகாம்”- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!
அரியலூர் மாவட்டம், வாளரக்குறிச்சியைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி அன்பரசன் என்பவரின் இல்ல சுப நிகழ்ச்சியையொட்டி, மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பட்டாசு வெடித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு மறுநாள் மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் உள்ள கடைக்கு அன்பரசனின் சகோதரர் திருநாவுக்கரசு சென்ற போது, மாற்று சமூகத்தினர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் காவல் நிலையம் முன்பு வைத்து திருநாவுக்கரசை ஊர்மக்கள் முன்பு காலில் விழ வைத்து மன்னிப்புக் கேட்க வைத்ததாகவும் தெரிகிறது. இது குறித்து அன்பரசன் அளித்த புகாரின் பேரில் தீண்டாமை வன்கொடுமை உள்பட ஏழு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் என்பவரை கைது செய்தனர்.
“நீதிமன்றங்களில் அம்பேத்கர் சிலைகள், உருவப்படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!
மேலும், தி.மு.க. பிரமுகர் கண்ணன் உள்பட ஐந்து பேரை இரண்டு தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து தபால் மூலம் குடியரசுத்தலைவர், ஆளுநர் உள்ளிட்டோருக்கும் புகார் அளித்தனர்.