Homeசெய்திகள்தமிழ்நாடு3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் - கனிமொழி எம்.பி. ஆவேசம்

3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் – கனிமொழி எம்.பி. ஆவேசம்

-

- Advertisement -

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் - கனிமொழி எம்.பி. ஆவேசம்

இது தொடர்பாக அவர் தனது வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, ”கும்மிடிப்பூண்டியில் சமூக விரோதிகளால் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் தன்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த அவர், “பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு என்ற ஒன்று உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்த மாநிலத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது” என விமர்சித்துள்ளார்.

we-r-hiring

அத்துடன், “பொறுப்பு என்ற சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை தாங்களே உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கும்மிடிப்பூண்டியில் நடந்த இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சிலிண்டர், டீசல் விலை உயர்வால் சிறு வியாபாரிகள் பாதிப்பு… ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – விக்கிரமராஜா

MUST READ