spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஜெ.பி.நட்டா உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு

ஜெ.பி.நட்டா உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு

-

- Advertisement -

ஜெ.பி.நட்டா உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

Image

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திடீர் பயணமாக காலை 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வரும் 18 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனான கூட்டம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் சூழல், அதிமுகவுடனான கூட்டணி உறவு குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. மேலும் ஆளுநர்-முதலமைச்சர் மோதல் விவகாரம் குறித்தும் இருவரும் பேசியதாக தெரிகிறது.

we-r-hiring

ஒரேநாளில் ஜே.பி.நட்டா வருகை - அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... ஏன்?  அண்ணாமலை பதில்!

தமிழ்நாட்டில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் 200 நாட்கள் நடைபெற உள்ள பாதயாத்திரை குறித்து நட்டாவுடன், அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழக பாஜக மேற்கொண்டிருக்கும் பணிகள் தொடர்பாக அண்ணாமலை நட்டாவிடம் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

 

MUST READ