Homeசெய்திகள்தமிழ்நாடுஇது பாஜகவின் யாத்திரை அல்ல, மக்களுக்கான யாத்திரை- அண்ணாமலை

இது பாஜகவின் யாத்திரை அல்ல, மக்களுக்கான யாத்திரை- அண்ணாமலை

-

இது பாஜகவின் யாத்திரை அல்ல, மக்களுக்கான யாத்திரை- அண்ணாமலை

என் மண் என் மக்கள் யாத்திரை பாஜகவின் யாத்திரை அல்ல, மக்களுக்கான யாத்திரை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Image

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ’என் மண் என் மக்கள்’ என்ற கோஷத்தோடு பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை அறந்தாங்கி, திருப்பத்தூர், மேலூர் வழியாக இன்று காலை மதுரை வந்தடைந்தது.

Image

இந்நிலையில் செல்லூரில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “என் மண் என் மக்கள் யாத்திரை பாஜகவின் யாத்திரை அல்ல, மக்களுக்கான யாத்திரை. 9 ஆண்டுகள் ஊழல் இல்லாத ஆட்சியாக, ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியாக மத்திய அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களை யாரும் நேரில் சந்திக்கவில்லை என்றாலும், மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மக்களை சந்தித்து வருகிறோம். எனக்கு மாலை, சால்வை போட்டு பணத்தை விரயம் செய்யாமல் முதியோர் இல்லத்திற்கு கொடுத்து உதவுங்கள்.

அனைத்து இந்திய மொழிகளையும், ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அதிகாரம் பெறும். இந்தி தொடர்பாக இரட்டை நிலைபாட்டில் விருது கொடுத்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெல்வார். அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அதிகாரம் பெறும் என அமித்ஷா கூறினார்.  2011 ஆம் ஆண்டு முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியை அமல்படுத்த 170 பரிந்துரைகளை வழங்கினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெளனம் காத்தது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

MUST READ