Homeசெய்திகள்தமிழ்நாடுபா.ஜ.க. வேட்பாளர்களின் இடங்களில் சோதனை செய்ய தி.மு.க. வலியுறுத்தல்!

பா.ஜ.க. வேட்பாளர்களின் இடங்களில் சோதனை செய்ய தி.மு.க. வலியுறுத்தல்!

-

 

"குட்காவைப் பரப்பியது அ.தி.மு.க. தான்"- ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!

பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு அளித்துள்ளது.

‘புஷ்பா 2’ டீசர் குறித்த அறிவிப்பு!

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனின் விடுதி மேலாளரிடம் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், “நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் அனைத்து பா.ஜ.க. வேட்பாளர் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்; மேலும், தேர்தலைப் பாரபட்சமின்றி நியாயமான முறையில் நடத்த வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்….எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ‘புஷ்பா 2’ பட புதிய போஸ்டர்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ