Homeசெய்திகள்தமிழ்நாடுமத்திய அரசு தவறு செய்தவர்களை ஒருபோதும் காப்பாற்ற நினைக்காது- வானதி சீனிவாசன்

மத்திய அரசு தவறு செய்தவர்களை ஒருபோதும் காப்பாற்ற நினைக்காது- வானதி சீனிவாசன்

-

மத்திய அரசு தவறு செய்தவர்களை ஒருபோதும் காப்பாற்ற நினைக்காது- வானதி சீனிவாசன்

ஒடிசா ரயில் விபத்து மிகுந்த துன்பத்தை தரக்கூடியது. இதற்கு முன்பாகவும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Image

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், “ரயில்வேதுறையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து வருகின்றன. 2014ல் பாஜக அரசு பதவியற்றதும், குறிக்கோளுடன் பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த சொன்னார், ஒடிசா ரயில் விபத்து மிகுந்த துன்பத்தை தரக்கூடியது. இதற்கு முன்பாகவும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இனி அவ்வாறு எதுவும் நடக்கக்கூடாது என்று மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவத்தை மோடி அரசு தருகிறது. ஒரு விபத்தால், ரயில்வே துறை அமைச்சர் செய்த நல்லவற்றை மறந்துவிடக் கூடாது. இதில் மறைக்க எதுவும் இல்லை. சிபிஐ விசாரணைக்கு உத்தவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு தவறு செய்தவர்களை ஒருபோதும் காப்பாற்ற நினைக்காது. ராகுல்காந்தி பாஜகவை வீழ்த்துவோம் என்று கடந்த 9 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். கர்நாடக வெற்றியை வைத்துக்கொண்டு அவர் கனவு கண்டால், அது பலிக்காது.

திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கும் பாஜக! பின்னணி என்ன?
வானதி சீனிவாசன் நேர்காணல்

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ஒவ்வொரு முதல்வரும் வெளிநாடு செல்வதில் தவறு இல்லை. ஆனால் இவர்கள் சொல்லும் முதலீடுகள் நிறைய சந்தேகங்களை கிளப்புகிறது. ஏற்கனவே இங்குள்ள நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டுள்ளதாக சொல்கிறார்கள். ராகுல்காந்தி நிகழ்ச்சியில் தேசிய கீதத்திற்கு கூட யாரும் எழுந்திருக்காதது, அவர் இந்தியர்களிடம் தான் பேசினாரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. திமுக அரசு மேகதாது பிரச்சனையை எப்படி அணுக உள்ளது என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்” என்றார்.

MUST READ