Homeசெய்திகள்தமிழ்நாடுமதுவை டோர் டெலிவரி செய்துவிட்டு போகலாம் - வானதி சீனிவாசன்

மதுவை டோர் டெலிவரி செய்துவிட்டு போகலாம் – வானதி சீனிவாசன்

-

மதுவை டோர் டெலிவரி செய்துவிட்டு போகலாம் – வானதி சீனிவாசன்

மைதானங்களில் மது அருந்த அனுமதி அளித்தற்கு பதில் டோர் டெலிவரி செய்யலாம் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

Vanathi srinivasan

கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட சாய்பாபா காலனி பகுதியில் மாநகராட்சி 69வது வார்டில் உள்ள பூங்காவை சீர்படுத்தி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிக்கான பூஜை போடப்பட்டது. விளையாட்டு மைதான பணிகளைத் தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “குடும்பத்தோடு அனைவரும் கலந்துகொள்ளும் திருமண நிகழ்ச்சியில் மது குடிக்க அனுமதிப்பது என்பது சீரழிவை நோக்கி மக்களை தள்ளுவதாய் உள்ளது. மக்களை சீரழிவை நோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியை தமிழ்நாடு அரசு செய்துவருகிறது. கண்டிப்பாக நாங்கள் DMKFiles விடுவதாக இல்லை. சட்டபேரவையிலும் தொடர்ந்து இதற்காக கேள்வி எழுப்புவோம். தற்சமயம் வெளிவந்துள்ள PTRleaks சம்பந்தமாக முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்.

12 மணிநேர வேலை என்பது ஒரு சில தொழில்களுக்கு மட்டுமே பொருந்தும். அதேபோல் யாரையும் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைக்க முடியாது. இது முழுக்க முழுக்க ஒருவரின் விருப்பம் சார்ந்தது. இன்று பல்வேறு நாடுகள் இந்தியாவை நோக்கி முதலீட்டிற்காக வருகின்றன. அவர்களுக்கு இங்குள்ள சட்டத்தில் சில மாறுதல்கள் தேவைப்படுகிறபோது அதைக் குறிப்பிட்ட துறையில் செய்வதில் தவறில்லை. இதை ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கு எதிரான சட்டமாக பார்ப்பது தவறு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ