spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுராகுல்காந்திக்கு பாஜகவினர் மிரட்டல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ராகுல்காந்திக்கு பாஜகவினர் மிரட்டல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

-

- Advertisement -

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

mk stalin rahul gandhi

we-r-hiring

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு எக்ஸ் வலைதள பதிவில், இந்திராகாந்தி நிலைமை தான் ராகுல் காந்திக்கும் ஏற்படும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்தது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இதேபோல், மகராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் உள்ள ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏ ஒருவர், ராகுல் காந்தியின நாக்கை அறுப்பவறுக்கு 11 லட்சம் பரிசு வழங்குவதாக தெரிவித்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

நாட்டு மக்கள் மத்தியில் ராகுல்காந்தியின் புகழ் வளர்ந்து வருவது சிலரை நிலைகுலைய வைத்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஜனநாயக நாட்டில் மிரட்டலுக்கு இடமில்லை என்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

MUST READ