spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஜூன் 15- ஆம் தேதி தொடங்குகிறது போடிநாயக்கனூர்- சென்னை ரயில் சேவை!

ஜூன் 15- ஆம் தேதி தொடங்குகிறது போடிநாயக்கனூர்- சென்னை ரயில் சேவை!

-

- Advertisement -

 

ஜூன் 15- ஆம் தேதி தொடங்குகிறது போடிநாயக்கனூர்- சென்னை ரயில் சேவை!
File Photo

தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, வரும் ஜூன் 15- ஆம் தேதி அன்று போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு முதல் ரயில் சேவைத் தொடங்குகிறது.

we-r-hiring

ஒடிஷா ரயில் விபத்து- 125 ரயில்கள் ரத்து!

மதுரை- போடிநாயக்கனூர் அகல ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்து, அந்த வழித்தடத்தில் ரயில் சேவைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போடிநாயக்கனூரில் இருந்து மதுரையைப் போல, சென்னைக்கும் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்று தேனி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு வரும் ஜூன் 15- ஆம் தேதி அன்று முதல் ரயில் சேவையைத் தொடங்குகிறது தெற்கு ரயில்வே.

இதன் தொடக்க விழா, போடிநாயக்கனூரில் இருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெறுகிறது. வரும் ஜூன் 15- ஆம் தேதி அன்று இரவு 08.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை நோக்கி, அந்த ரயில் தனது முதல் பயணத்தைத் தொடங்குகிறது. தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி, பெரம்பூர் ஆகிய நிலையங்களில் அந்த ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டோலிவுட்டில் கோலாகல திருமணம்… பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்க்கு டும் டும் டும்! .

வியாழன்கிழமை, செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் போடிநாயக்கனூரில் இருந்தும், திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்தும் அந்த ரயில் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ