spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்களுக்கு சுமை... கல்வியை வணிக மயமாக்கும் நடவடிக்கை - பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆவேசம்

மாணவர்களுக்கு சுமை… கல்வியை வணிக மயமாக்கும் நடவடிக்கை – பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆவேசம்

-

- Advertisement -

தேர்வை நோக்கி நகர்த்துவது மாணவர்களுக்கு எளிமை என்ற பெயரில் கொடுக்கக்கூடிய ஒரு சுமை தான், என பொது பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியுள்ளாா்.மாணவர்களுக்கு சுமை... கல்வியை வணிக மயமாக்கும் நடவடிக்கை - பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆவேசம்மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ” மத்திய இடைநிலை கல்வி வாரியம் இன்று அறிவித்ததைப் போலவே பிற மாநில பாடத்திட்டங்களிலும் இதைப் பின்பற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வரும் காலங்களில் வர வாய்ப்பு இருப்பதாகவும் இது மாணவர்களின் நலன் சார்ந்தது அல்ல. மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ள ஒரே கல்வியாண்டில் இரண்டு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு கல்வியையும் மாணவர்களையும் வணிக மயமாக்குவதற்கான நடவடிக்கை என்றும் குற்றச்சாட்டியுள்ளாா்.

ஒரே கல்வியாண்டில் இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவதால் பாட நாட்களின் எண்ணிக்கை குறைவது என்பது மாணவர்களுக்கு சுமை அல்லவா ; பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் பாடங்களை குறைத்து விட்டு பட்டப் படிப்பு சேர்வதற்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளீர்கள். அந்த தேர்விற்கு மாணவர்கள் மீண்டும் பயிற்சி கூடத்தை நாடி செல்ல வேண்டும்” என கூறியுள்ளாா்.

மதுரையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் –  தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆய்வு!

we-r-hiring

MUST READ