
கோவையில் தனியாருக்கு சொந்தமான பண்ணையில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், பண்ணையில் இருந்த ஒட்டகங்கள், குதிரைகள், கழுதைகள் மீட்கப்பட்டுள்ளன.
தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்!
கோவை- கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்கமித்ரா பண்ணையில் இருந்து இரண்டு ஒட்டகங்கள், நான்கு குதிரைகள், இரண்டு கழுதைகள், ஒரு நாய் மற்றும் இரண்டு நாய் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், இரண்டு ஒட்டகங்கள் சென்னையில் உள்ள பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், நான்கு குதிரைகள், இரண்டு கழுதைகள் மற்றும் நாய்கள் பராமரிப்புக்காக, தன்னார்வலர்கள் நடத்தும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி- 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
சம்மந்தப்பட்ட பண்ணையில் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி பெறாமல் விலங்குகளை வைத்திருந்ததாகவும், விலங்குகளை அடித்துத் துன்புறுத்துவதாகவும் புகார் எழுந்தது. மேலும், ஒட்டகங்களை இரும்புக் கம்பியால் அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சிகளும் வெளியாகின.
இதன் அடிப்படையில் ஆய்வு செய்த, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் பண்ணையில் இருந்த விலங்குகளை மீட்டனர். இந்த ஆய்வில் மூன்று ஒட்டகங்கள் காணாமல் போனதும், ஒரு ஒட்டகம் பராமரிக்கப்படாததால், உயிரிழந்ததும் தெரிய வந்தது.