spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

-

- Advertisement -

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.32.47 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 32.47 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன் பேரில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்தியலிங்கம் மீதும், அவரது மகன் பிரபு மீதும் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது.

we-r-hiring

வைத்திலிங்கம்

வைத்தியலிங்கம் தனது அமைச்சர் பதவியை தவறுதலாக பயன்படுத்தி வருமானத்தை விட 1,057 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ஏற்கனவே அமைச்சராக இருந்த காலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட  27.9 கோடி லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது வருமானத்திற்கு அதிகமாக 32.47 கோடி சொத்து சேர்த்ததாக புதிய வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ