தீபாவளி பண்டிகையையொட்டி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 1,058 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் சிலர் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசுகளை வெடித்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், நேர கட்டுப்பாடை தாண்டி தமிழக முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்ததாக கூறி 1,058 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதில் குறிப்பாக சென்னையில் மட்டும் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஆவடி மாநகரத்தில் 89 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார்.