Homeசெய்திகள்தமிழ்நாடு"சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்"- முதலமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்”- முதலமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

-

 

"சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்"- முதலமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
File Photo

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.09) காலை 10.00 மணிக்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வின் போது, பா.ம.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணையை வெளியிட்டு அதிரடி காட்டிய ராஜஸ்தான் அரசு!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், “வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம். 10.5% இடஒதுக்கீட்டில் பேசி முடிவெடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு இன்னும் தரவுகளை வழங்கவில்லை. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை சாதிப்பிரச்சனையாகப் பார்க்கக் கூடாது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் கொடுத்தால் தான் சட்டமாக்க முடியும். நடப்பு கூட்டத்தொடரில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

தமிழக அரசு உள் ஒதுக்கீட்டை எப்போது நிறைவேற்றும் என்பது தான் எங்கள் கேள்வி. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் தான் இடஒதுக்கீட்டைப் பாதிக்க முடியும். சமூகநீதியை பேசும் தமிழக அரசு, அதனை செயலில் காட்ட வேண்டும். தமிழகத்தில் சமூகநீதி பேசும் தி.மு.க., சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். தமிழகத்தில் 22 மாவட்டங்கள் காவிரி நீரை நம்பி தான் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ