Homeசெய்திகள்தமிழ்நாடுகாவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்!

காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்!

-

 

காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்!
Video Crop Image

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (அக்.09) காலை 10.00 மணிக்கு சட்டப்பேரவைச் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாள் என்பதால், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது, சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள் ஆண்டமுத்து, கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.

அதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடகா அரசு நிறைவேற்ற வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். கர்நாடகா அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தும் விதமாக சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

“ஹேலோ சுற்றுப்பாதையை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றி”- இஸ்ரோ தகவல்!

பின்னர் பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதில் தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் காவிரி உரிமையைக் காப்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது. செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது.

தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து விட வேண்டிய காவிரி நீரை முறையாகத் திறந்துவிடவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவு படி, மாத வாரியாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினோம். தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டிய சூழலில், 2.28 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்ட ஜூலை 17- ஆம் தேதி முதல் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

MUST READ