Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் மனைவி கேவியட் மனுதாக்கல்

செந்தில் பாலாஜியின் மனைவி கேவியட் மனுதாக்கல்

-

- Advertisement -

செந்தில் பாலாஜியின் மனைவி கேவியட் மனுதாக்கல்

அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

senthilbalaji

அமைச்சர் செந்தில்பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அறுவைச் சிகிச்சைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வரும் ஜூன் 21- ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!

இதனிடையே செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், செந்தில்பாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த கேவியட் மனுவில், தனது தரப்பை கேட்ட பிறகே அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மேகலா கோரியுள்ளார்.

 

MUST READ