Homeசெய்திகள்தமிழ்நாடுசந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

-

- Advertisement -

 

சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
Photo: ISRO

சந்திரயான்- 3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், அந்த சரித்திர சாதனையில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேலைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்!

we-r-hiring

திமுகவினர் அதிகளவில் கருப்பு பணம் குவிப்பு- அண்ணாமலை

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பழனிவேல் என்பவரது மகன் தான் வீரமுத்துவேல். இவருக்கு விண்வெளித்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம், சிறுவயது முதலே இருந்து வந்தது. தொழிற்கல்வி முடித்தவுடன் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும், சென்னை ஐ.ஐ.டி.யிலும் தொழிற்கல்வி பொறியியல், முதுநிலை ஆராய்ச்சி என அடுத்தடுத்து தொடர்ந்து படித்தார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் ஏரோ ஸ்பேஸ் துறையில் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வீரமுத்துவேலுக்கு கடந்த 1989- ஆம் ஆண்டு இஸ்ரோவில் விஞ்ஞானி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. நுணுக்கமான வேலைகளை தானே செய்து முடிக்கும் வீரமுத்துவேல், கடந்த 2016- ஆம் ஆண்டு விண்கலத்தின் மின் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து அவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை பெங்களூருவில் உள்ள செயற்கைகோள் மையத்தில் சோதிக்கப்பட்டது.

அப்போது அந்த தொழில்நுட்பம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, சந்திரயான்- 3 திட்ட இயக்குநராக வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். இஸ்ரோவில் கடந்த 30- ஆம் ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பொறுப்புகளிலும், திட்டங்களிலும் பணியாற்றிய வீரமுத்துவேல் கடந்த 2019- ஆம் ஆண்டு சந்திரயான்- 3 திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

காமராஜர் பிறந்தநாள்- தலைவர்கள் மரியாதை

இவருக்கு கீழ் 29 துணை இயக்குநர்களும், அவர்களுக்கு கீழே விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் உருவாக்கியது தான் சந்திரயான்- 3 திட்டம்.

ஏற்கனவே, சந்திரயான்- 1, சந்திரயான்-2 ஆகிய திட்டங்களிலும் தமிழர்களே திட்ட இயக்குநர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ