spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரோ 2, 3 மற்றும் 5ம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது!

மெட்ரோ 2, 3 மற்றும் 5ம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது!

-

- Advertisement -

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3 மற்றும் 5-ல் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

we-r-hiring

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் (சோழிங்கநல்லூர் ஏரி-I முதல் சிறுசேரி சிப்காட் II மெட்ரோ வரை) மற்றும் வழித்தடம் 5-ல் (கோயம்பேடு சந்தை முதல் எல்காட் பூங்கா மெட்ரோ வரை) மெட்ரோ இரயில் நிலையங்களில் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் ஷிண்ட்லர் இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த பணிகளுக்கான ஏற்பு கடிதத்தை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு.ராஜேஷ் சதுர்வேதி, (அமைப்புகள் மற்றும் இயக்கம்), ஷிண்ட்லர் இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ஷிண்ட்லர் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

MUST READ