Homeசெய்திகள்தமிழ்நாடுஒன்றிய அரசைக் கண்டித்து சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

-

ஒன்றிய அரசைக் கண்டித்து மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் அருகே மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரே கோஷமிட்டனர்.இந்த ஆர்ப்பாட்டங்களில் சென்னை மேயர் பிரியா, மாவட்டக் கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

MUST READ