மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை
அட்சய திருதியை-ஐ முன்னிட்டு கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று ஏற்றம் காண தொடங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான். விழாக்காலமான அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் தங்க விற்பனை அதிகரித்ததும் ஆர்பிஐ கொள்முதலில் இறங்கியதுமே தங்கத்தின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என தெரிகிறது.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.44,920- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ. 5,615-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000- க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.