- Advertisement -
தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் விற்க அனுமதி வழங்கக் கோரிய வழக்கை தள்ளிவைத்தது பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு. மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, டாஸ்மாக்-கில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் விற்பது என்பது அரசின் கொள்கை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஜூலை 29-க்குள் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.