Homeசெய்திகள்தமிழ்நாடுதயிர் பூரியில் கரப்பான் பூச்சி....உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள்!

தயிர் பூரியில் கரப்பான் பூச்சி….உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள்!

-

- Advertisement -

 

சென்னை பாண்டி பஜார் பகுதியில் உள்ள உணவகத்தில் வழங்கப்பட்ட தயிர் பூரியில் கரப்பான்பூச்சி இருந்ததாக அளித்த புகார் தொடர்பாக, உணவுப் பாதுகாப்புத்துறையினர், சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

ஐந்து மணி நேரத்தில் ரூபாய் ஐந்து கோடிக்கு ஆடுகள் விற்பனை!

கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணியான நித்யா என்பவர், வாங்கிய தயிர் பூரியில் கரப்பான்பூச்சி இருந்ததாகக் கூறி, உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்தார். மேலும், இதனை சாப்பிட்ட பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆமைகளைக் கடத்தி வந்த இருவர் கைது- சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்த உணவகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதில், மின் விளக்கில் வரும் பூச்சி தான் உணவில் இருந்ததாகக் கூறியுள்ளனர். இருப்பினும், சமையலறையைத் தூய்மையாகப் பராமரிக்கவில்லை எனக் கூறி உணவகத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

MUST READ