spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் இல்லம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆம்ஸ்ட்ராங் இல்லம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லம் சென்று அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

we-r-hiring

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜீலை 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி அன்று இரவே உயிரிழந்தார். இந்த வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவர்களுடைய குடும்பத்தினருக்கு சொல்ல இருக்கிறார்.

 

 

MUST READ