Homeசெய்திகள்தமிழ்நாடுநாட்டின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாட்டின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -
kadalkanni

இந்தியாவில் சக்திவாய்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாப்-10க்குள் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா டுடேவின் நவம்பர் மாத இதழில் இந்தியாவின் அதிகார சபை என்ற தலைப்பில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாட்டில் அதிகார வலிமை மிக்க 20 அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 2வது இடத்திலும், பாஜக தலைவர் அமித்ஷா 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். இவை தவிர்த்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிகார் முதல்வர் நிதிஷ்குமார், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் ஆகியோரும் டாப் 10க்குள் இடம்பிடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 70% வாக்குகளுடன் வெற்றி வாகை சூடியதாகவும்,  மற்ற மாநிலங்களில் ஓரிரு இடங்களிலாவது வெற்றிபெற்ற பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை என்றும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணிக்கு முக்கிய அம்சமாக, எஃகு போல மு.க.ஸ்டாலின்  திகழ்கிறார் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 2021-ல் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதில் இருந்து ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ள இந்தியா டுடே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 130 நிறுவனங்களிடம் இருந்து ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

MUST READ