spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா பயணம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா பயணம்

-

- Advertisement -

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா பயணம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று இரவு 10 மணிக்கு, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து துபாய் வழியாக, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு செல்கிறார். இரவு 8:30 மணி அளவில், சென்னை பழைய விமான நிலையம் வருவார். கேட் எண் 6 -ல்  முதலமைச்சருக்கு, பாராட்டு நிகழ்ச்சி நடக்க விருக்கிறது.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, முதல்வர் ஸ்டாலின் இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

we-r-hiring

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டது. அதில் ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் தொடர்ச்சியாக, உயர்தர வேலைவாய்ப்பு, உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, முதல்வர் அமெரிக்கா செல்வதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல்வரின் பயண முன்னேற்பாடுகளுக்காக, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பங்கேற்க உள்ள ‘சிகாகோ – அமெரிக்க தமிழர்கள் உடனான

அமெரிக்காவில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. சந்திப்பு’ நிகழ்ச்சி தொடர்பாக சிகாகோவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகளுடன் அவர்  ஆலோசனை நடத்தியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின், தனது அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்துவிட்டு, வருகின்ற செப்டம்பர் மாதம், 14 ஆம் தேதி காலை 8:15 மணிக்கு, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், துபாய் வழியாக சென்னை திரும்புகிறார் என தெரிவிக்கின்றனர்.

MUST READ