spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு

மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு

-

- Advertisement -

மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும், இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

​தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆணையிட்டுள்ளார் அதன்படி,  திருநெல்வேலி மாவட்டத்திற்கு, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு; ​தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

we-r-hiring

tamilnadu assembly

இதேபோல், திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு; தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்; தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நிமியக்கப்பட்டு உள்ளனர்.

"அவர் பாராட்டி பேசியது இந்த தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
Photo: Chief Minister Of Tamilnadu

நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்; கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி; கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி;
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி; பெரம்பலூர் மாவட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி; மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோரை பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

MUST READ