spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

-

- Advertisement -

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

we-r-hiring

முதலமைச்சர் அலுவலக நுழைவாயில் அருகில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 18 கோடியே 90 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதேபோல் கலைமாமணி திரு. முருகேச பாண்டியன் அவர்கள் தொகுத்து, என்.சி.பி.ஹெச். பதிப்பக நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய அனைத்து நாடகங்கள் அடங்கிய இரு பாகங்கள் கொண்ட நூல்களை வெளியிடுகிறார்.

நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஈரோடு, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருநெல்வேலி அரியலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 1177 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் 71 கோடியே 9 இலட்சம் ரூபாய் செலவில் இரயில்வே கடவுகளுக்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள இரண்டு சாலை மேம்பாலங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தொழில் நுட்ப உதவியாளர் (சிவில்) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 36 நபர்களுக்கும், நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் அளவர் / உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 24 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் விருதுநகர், தேனி, இராமநாதபுரம், திருவள்ளூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கிறித்தவர்களுக்கான அரசு பொது கல்லறைத் தோட்டங்கள் மற்றும் விருதுநகர், தேனி, திருவள்ளூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இஸ்லாமியர்களுக்கான அரசு பொது கபர்ஸ்தான்கள் அமைத்திட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவ்விடங்களை சுற்றுச்சுவர், பெயர் பலகை, மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை, அமைத்து முறையாக பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்கிடும் விதமாக அதற்கான ஆணையினை நகராட்சி ஆணையர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம் வழங்குகிறார்.

MUST READ