Homeசெய்திகள்தமிழ்நாடுகுழந்தை பாலின விவகாரம் - மன்னிப்பு கோரினார் இர்ஃபான்

குழந்தை பாலின விவகாரம் – மன்னிப்பு கோரினார் இர்ஃபான்

-

குழந்தை பாலின விவகாரம் - மன்னிப்பு கோரினார் இர்ஃபான்

கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை முன்கூட்டியே கண்டறிந்து யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் வழங்கிய நிலையில் இர்ஃபான் நேரில் சென்று இயக்குனரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனரை நேரில் சந்தித்து தான் செய்த தவறுக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்ஃபான்.

இர்ஃபானின் மன்னிப்பு கடிதத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்ட நிலையில் , 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்ட இர்ஃபான் சிசுக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு காணொளியை வெளியிட வேண்டுமென நிபந்தனை தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சிசுக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வீடியோ வெளியிடுவதாகவும் இர்ஃபான் உறுதி அளித்துள்ளார்.

MUST READ