Homeசெய்திகள்தமிழ்நாடுசித்திரை திருவிழா....பூக்களின் விலை உயர்வு!

சித்திரை திருவிழா….பூக்களின் விலை உயர்வு!

-

 

மதுரையில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ ….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மதுரை மாவட்டம், மாட்டுத்தாவணி மலர்ச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றனர். இங்கு மதுரை மட்டுமல்லாது, தென் மாவட்டங்களைச் சேர்ந்த பூ வியாபாரிகளும் அதிகளவில் மலர்களை வாங்கிச் செல்கின்றனர்.

நாளை (ஏப்ரல் 21) மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 22- ஆம் தேதி சித்திரை திருவிழா தேரோட்டமும், ஏப்ரல் 23- ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், நடைபெறவிருப்பதால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதனால் மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் மலர்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, 300 ரூபாய்க்கு விற்பனையான மதுரை மல்லிகை ரூபாய் 500- க்கும், பிச்சுப்பூ கிலோ ரூபாய் 400- க்கும், முல்லைப் பூ கிலோ ரூபாய் 300- க்கும் என அனைத்து மலர்களும் விலையேற்றம் கண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவேசம் படக்குழுவினரை வாழ்த்திய விக்னேஷ் சிவன்!

மேலும் ஒருவாரம் வரை மலர்களின் விலை அதிகரித்தே விற்பனை ஆகும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ