கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் குடும்ப குடும்பமாகவும் நண்பர்கள் குழுக்களாகவும் படகுகளில் பயணித்தவாறு கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்.உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி நேற்று குமரி மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு வழிபாடுகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது .
அனைத்து ஆலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் இன்று தேங்காய் பட்டணம் தூத்தூர் உட்பட மாவட்டத்தின் அனைத்து கடற்கரை கிராமங்களிலும் மீனவர்கள் மற்றும் அனைத்து மக்களும் படகுகளில் குடும்ப குடும்பமாகவும் நண்பர்கள் குழுக்களாகவும் ,தனித்தனி படைகளில் சென்று படைகுகளில் ஆண்கள் ,பெண்கள், சிறுவர், சிறுமியர் ,குழந்தைகள் என கேக் வெட்டியும் படகுகளில் பாடல்களை இசைத்தவாறு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாகமாக கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கடற்கரை கிராமங்களிலும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.