Homeசெய்திகள்தமிழ்நாடுகேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

-

- Advertisement -

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் திடீர் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

we-r-hiring

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் உலகளவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 60 வரையிலும், வணிக ரீதியிலான சிலிண்டர் விலை ரூ. 115 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஸ்டார் ஹோட்டல்கள் முதல் சிறு சிறு தேநீர் கடைகள் வரை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகமும் இன்னும் ஒரிரு நாட்களில் நிறுத்தப்படலாம என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நிலவி வரும் சலையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் உணவுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் முதலமைச்சர் தலைமையில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள், வணிக சிலிண்டர் கிடைக்காததால் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனைத் தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

234 தொகுதி தமிழ் நாட்டிற்கு வந்தது எப்படி? அரசியல் கணக்கையே மாற்றியது எப்படி?

மேலும், சிலிண்டர் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி யாரேனும் சட்டவிரோதமாகப் பதுக்கலில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்குத் தேவையான எரிவாயு விநியோகத்தை உறுதி செய்ய மத்திய அரசுடனும், எண்ணெய் நிறுவனங்களுடனும் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிப்படி சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும், தற்போதைய சூழலில் பொதுமக்களின் சுமையைக் குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதேநேரம், தட்டுப்பாட்டைக் குறைக்க மத்திய அரசு சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். “எரிவாயு தட்டுப்பாட்டால் சாமானிய மக்கள் மற்றும் உணவகத் தொழில் பாதிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்” என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ