
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே அத்திப்பள்ளத்தில் வெல்டிங் வைக்கும் போது ஏற்பட்ட மின் கசிவால் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவர் கார்த்திக் என்ற இளைஞர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் வேல்முருகன் மணப்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புதுக்கோட்டை, விராலிமலை பட்டாசு குடோனில் வெடி விபத்தில் உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


