Homeசெய்திகள்தமிழ்நாடு"கோவையில் குடிநீர் தட்டுப்பாடு சரி செய்யப்படும்"- சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி!

“கோவையில் குடிநீர் தட்டுப்பாடு சரி செய்யப்படும்”- சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி!

-

 

"கோவையில் குடிநீர் தட்டுப்பாடு சரி செய்யப்படும்"- சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
Photo: TN Govt

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று (அக்.11) அவை அலுவலில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, “அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரினார்.

பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் பிரதமர்!

இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காளிங்கராயன் அணையில் இருந்து தண்ணீர் கிடைத்ததும் அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடங்கும். இரண்டாம் கட்ட அத்திக்கடவு- அவிநாசி திட்டம் ஆய்வு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்” என்றார்.

திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!

அதைத் தொடர்ந்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம் 20 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும். பில்லூர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் கோவை மாநகரின் குடிநீர் கட்டுப்பாடு சரி செய்யப்படும். பில்லூர் திட்டம் தொடங்கியதும் 24 மணி நேரமும் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ