spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு14 கோடி ஏமாற்றியதாக பிரபல நகை கடை உரிமையாளர் மீது புகார் !!!

14 கோடி ஏமாற்றியதாக பிரபல நகை கடை உரிமையாளர் மீது புகார் !!!

-

- Advertisement -

பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மீது இதுவரை தமிழகம் முழுவதும் 635 புகார்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்- குற்றபிரிவு டி எஸ் பி தகவல்…

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரி நகைக் கடையில் முதலீடு செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவதாக கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.அதை நம்பி தமிழகம் முழுவதும் உள்ள கிளைகளில் பலர் ஆயிரம் ரூபாய் முதல் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக முதலீடு செய்தவர்களுக்கு சரிவர வட்டி கொடுக்காமல் இழுக்கடித்துள்ளனர்.

14 கோடி ஏமாற்றியதாக பிரபல நகை கடை உரிமையாளர் மீது புகார் !!! மேலும் திருச்சி உள்ளிட்ட கிளைகள் மூடப்பட்டுள்ளன இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் மற்றும் நகை சீட்டு போட்டவர்கள் திருச்சி கடை முன்பு முற்றுகை மற்றும் மறியல் போராட்டங்களில் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டனர்.

we-r-hiring

இதனையடுத்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க காவல்துறையினர் அறிவுறுத்தினர். கடந்த இரு தினங்களாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து தாங்கள் பாதிக்கப்பட்டதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்து புகார் அளித்தனர்.

 

இந்நிலையில் நேற்று திருச்சி, சென்னை, பாண்டிச்சேரி மதுரை உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள கிளைகளிலும், மற்றும் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ்க்கு சொந்தமான மூன்று வீடுகள் என 11- இடங்களில் சோதனை நடைபெற்றது.திருச்சியில் மலைக்கோட்டை பகுதி மற்றும் கரூர் பைபாஸ் சாலை என இரண்டு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி நகைக்கடைகளிலும் போலீசார் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் தமிழக முழுவதும் பிரணவ் ஜூவலரியில் நடைபெற்ற சோதனையில் 1 கிலோ 900 கிராம் தங்கம், 22 கிலோ வெள்ளி, 1, 48,711 ரொக்கம் இதுவரை பிரணாவ் ஜிவல்லரியில் பறிமுதல் செய்யபட்டுள்ளது என திருச்சி பொருளாதார குற்றபிரிவு டிஎஸ்பி லில்லி கிரேசி தகவல் தெரிவித்துள்ளார்.பிரணவ் ஜிவல்லரியில் நகைகள் மற்றும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இதுவரை தமிழகம் முழுவதும் 635 புகார்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

சுமார் 14 கோடி ஏமாந்ததாக புகார் அளித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் பலர் இன்னும் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் தொடர்ந்து அளித்து வருவதால் இதன் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது..

MUST READ