Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

-

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான 7.5% சிறப்பு உள் இட ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.

2023 – 2024 ம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவப் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை விண்ணப்பிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டை விட 3994 கூடுதலாக விண்ணப்பித்ததால், மொத்தம் 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தரவரிசைப் பட்டியலும் மற்றும் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கான பட்டியலும் கடந்த ஜூலை 16ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

கலந்தாய்வு

அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 6326 எம்பிபிஎஸ் இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 1768 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. 7.5 சதவீதத்திற்கான உள் ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் கீழ் 473 எம்பிபிஎஸ் இடங்களும், பிடிஎஸ் படிப்பிற்கு 133 இடங்களும் உள்ளன. மொத்தமாக நடப்பாண்டில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர உள்ளனர். சிறப்பு பிரிவினர்களுக்கு என்ற அடிப்படையில் 7.5% அரசுப் பள்ளி இட ஒதுக்கீட்டிற்கும், விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் போன்றவர்களுக்கு 27, 28ஆகிய தேதிகளில் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நேரடி கலந்தாய்வு நடைபெற்றுவருகிறது. காலை 9.30 மணி, 11.30 மணி, 2.30 மணி என மூன்று சுற்றுகளாக நடைபெறும் இந்த கலந்தாய்வில், எம்பிபிஎஸ் இடங்கள்-473, பிடிஎஸ் இடங்கள் 133 நிரப்பப்பட உள்ளன.

MUST READ