Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமித்ஷா இரங்கல்!

பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமித்ஷா இரங்கல்!

-

 

"தமிழகத்திற்கு ரூபாய் 2.47 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில்!
Photo: Amit Shah

கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபேட்டை நகரம், நேதாஜி ரோட்டில் உள்ள போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும், தனியாருக்கு சொந்தமான பட்டாசுக் கடையில் இன்று (ஜூலை 29) காலை எதிர்ப்பாராத விதமாக, ஏற்பட்ட வெடி விபத்தில், எட்டு பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

“சேலத்தில் இருந்து கொச்சி உள்பட மூன்று நகரங்களுக்கு விமான சேவையைத் தொடங்க மத்திய அரசு அனுமதி”- எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பேட்டி!

இந்த நிலையில், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடி விபத்து – பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்

அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கிருஷ்ணகிரி பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயை பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதேபோல், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

MUST READ