spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பட்டாசு உற்பத்தி, விற்பனை தொடர்பான விதிகளைக் கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"- டாக்டர் ராமதாஸ்...

“பட்டாசு உற்பத்தி, விற்பனை தொடர்பான விதிகளைக் கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

Ramadoss

we-r-hiring

பட்டாசு உற்பத்தி, இருப்பு வைத்தல், கையாளுதல், விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

“வைகை, பல்லவன் ரயில்கள் வரும் அக்.10- ஆம் தேதி பகுதியாக ரத்து”!

இது தொடர்பாக, டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அத்திப்பள்ளி என்ற இடத்தில் பட்டாசுக் கடையில் பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; 15- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழு நலம் பெற என விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனியார் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்தில் தீ!

அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் பட்டாசு உற்பத்தி, இருப்பு வைத்தல், கையாளுதல், விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ