spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகடலூர் அருகே அதிமுக வார்டு செயலாளர் வெட்டி படுகொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ்...

கடலூர் அருகே அதிமுக வார்டு செயலாளர் வெட்டி படுகொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

-

- Advertisement -

கடலூர் மாவட்டம் திருப்பனாம்பாக்கம் என்ற இடத்தில் அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

கடலூர் மாவட்டம் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் பக்தா என்ற பத்மநாதன் (43). இவர் நேற்றிரவு திருப்பனாம்பாக்கம் என்ற இடத்தில் கோவில் கலைநிகழ்ச்சியை பார்த்துவிட்டு அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் மர்ம நபர்கள் சிலர் பத்மநாதன் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளனர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த பத்மநாதனை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த பத்மநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடலூர் பகுதியைச் சேர்ந்த சிலர் முன் விரோதம் காரணமாக பத்மநாதனை வெட்டிக்கொலை செய்ததாக பாகூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

 

 

 

MUST READ